இந்நூல், திருக்குறளுடன் ISO-9000 தர மேலாண்மையை ஒப்பீடு செய்கிறது.பன்னாட்டு தர நிர்ணய கழகத்தின் எண்ணங்கள் , தோற்றுவித்து 30 ஆண்டுகளாகியும், நோக்கங்களில் 30% கூட நிறைவேறவில்லை. கோட்பாடுகளையும் மாற்றிக்கொண்டே வருகிறது. முற்றுப் பெறவில்லை. ஏன்? குறைபாடுகள் பல. ஐஸ்ஸோ சான்றிதழ் ஏன் என்பதும் யாருக்கும் புரியவில்லை. மக்களை ஏமாற்றும் வியாபார யுக்தியாகவே உள்ளது. சான்றிதழ் அளிப்பவர்களும் தரமற்றவர்களாகவே உள்ளனர். இதை யாரும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படுத்தினாலும் ஐஸ்சோ எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை. அவர்களின் கட்டுப்பாட்டிலும் இல்லை. இச்சூழ்நிலையில், சமுகம் விழிப்புணர்வு பெறவே, திருக்குறளுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் தரநிர்வாகத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணரமுடியும். திருக்குறள் வழியில் உயர்தர தர முத்திரையை உருவாக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. திருக்குறள் தரமுத்திரை அறம், திறன், சிறந்த சமுகநோக்கு அறிவுசார்ந்த மேலாண்மையை நிர்வாகங்களில் உருவாக்கும். ஐஸ்சோ திருக்குறளை பயன்படுத்தி தரமேலாண்மையை மேம்படுத்தவேண்டும்.